Spotlightதமிழ்நாடு

19 மாவட்டங்களில் இன்றும் மழை நீடிக்கும்!

நிவர் புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

மழையின் அளவும் அதிகமாக பெய்துள்ளது. கடலூரில் அதிகபட்சமாக 24.6 சென்டிமீட்டரும் புதுச்சேரியில் 23.7 சென்டிமீட்டரும், காரைக்காலில் 8.6 சென்டிமீட்டரும் மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 8.9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

நாகப்பட்டினத்தில் 6.3 சென்டிமீட்டர், சேத்துப்பட்டில் 13 சென்டிமீட்டர், வந்தவாசியில் 11 சென்டிமீட்டர், ஆரணியில் 8 புள்ளி 4, திருவண்ணாமலையில் 7 சென்டிமீட்டர் மழை பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிகவும் கன மழை பெய்யும் என்றும் சென்னை, திருச்சி, அரியலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button