Spotlightஇந்தியாதமிழ்நாடு

நிவர் புயல்; முக்கியச் செய்திகள்! 26/11/20

முழுவதும் கரையை கடந்தது ‘நிவர்’ புயல் – அதி தீவிர புயலாக இருந்து தீவிர புயலாக வலுவிழந்து கரையை கடந்தது நிவர் புயல்.. புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் 11.30 முதல் 2.30 மணி வரை முழுவதுமாக கரையை கடந்துள்ளது..

நிவர் புயல் கரையைக் கடந்து விட்ட நிலையிலும் தமிழகத்தின் வடமாவட்டங்களில் மழை தொடரும் என்றும், பலத்த காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1500 கனஅடியாக குறைப்பு.. ஏரிக்கு நீர் வரத்து குறைந்ததால் அதிகாரிகள் நடவடிக்கை.. ஏரியின் நீர் மட்டத்தை 21 அடியில் நிலையாக வைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு..

கடலூரில் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது கனமழை.. புதுச்சேரியிலும் புயல் கரையை கடந்த பிறகும் தொடர்ந்து மழை பெய்தது..

மரக்காணத்தில் இன்று அதிகாலை சாய்ந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு வருகின்றன.

கடலூரில் நேற்று நவ 25 காலை 8.30 மணி முதல் நவம்பர் 26 அதிகாலை 3.30 வரை 25 செ.மீ மழை பதிவாகியுள்ளது.. புதுச்சேரி – 26.செ.மீ.. சென்னை – 8 செ.மீ.. காரைக்கால் – 9 செ.மீ… நாகப்பட்டினம் – 6 செ.மீ.. சென்னை தாம்பரத்தில் அதிகபட்சமாக 31.4 செ.மீ மழை.. – வானிலை மையம் தகவல்..

நிவர் புயல் தாக்கத்தால் சென்னையில் 68 இடங்களில் மரங்கள் சாய்ந்து விட்டன..

கரையை கடந்த நிவர் புயல் தற்போது புதுச்சேரியிலிருந்து 50 கி.மீ. வடமேற்கே நிலப்பகுதியில் நிலை கொண்டுள்ளது.

கடலூர் மாவட்டம் மனம்பாடி கிராமத்தில் 200 ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின.

தொடர் மழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது சென்னை புறநகர் பகுதிகள்..

நிவர் புயலால் சென்னையில் பெரிய பாதிப்புகள் இல்லை: தொடர் மழையால் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது.

புயல் சேத விவரங்களை முதல்வர் பழனிசாமி பின்பு வெளியிடுவார்; நிவர் புயல் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னையில் விமான சேவை காலை 9 மணி முதல் துவங்கும்.. சென்னை விமான நிலையம் செயல்பட தொடங்கியது.. காலை 6 மணி முதல் டெல்லி, அந்தமான், அகமதாபாத் போன்ற நகரங்களுக்கு செல்ல பயணிகள் வந்தனர்.

Facebook Comments

Related Articles

Back to top button