Spotlightதமிழ்நாடு

நிவர் புயல்; தற்போதைய நிலை என்ன.? லேட்டஸ்ட் அப்டேட்!

நிவர் தீவிர புயலாக வலுப்பெற்றது. அடுத்த 9 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெறும்.. 155 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு. இன்று நள்ளிரவில் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நிவர் புயல் தற்போது சென்னையில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ளது.
இலங்கைக்கு மேலே வடகிழக்கு பகுதியில் இந்த புயல் மையம் கொண்டுள்ளது. காற்றின் வேகம் இங்கு ஏற்கனவே 100 கிமீயை நெருங்கிவிட்டது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

நிவர் புயலானது 95% கஜாவுக்கு சமமானது என பேரிடர் மீட்பு ஆலோசகர் பிரபு காந்தி தெரிவித்துள்ளார்.

பலத்த மழை காரணமாக முழு கொள்ளளவை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி… இன்று முழு கொள்ளளவை எட்டும் என அதிகாரிகள் தகவல்… 24 அடி கொள்ளளவு உள்ள நிலையில் ஏரியின் நீர்மட்டம் 21.55 அடியை எட்டியது.

புதுச்சேரிக்கு அருகில் இன்றிரவு நிவர் புயல் கரையை கடக்க வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. அதிதீவிர புயல் உருவாகி உள்ளதை குறிக்கும் வகையில் 10ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.. புயலானது துறைமுகம் அருகே கடந்து செல்லும் அபாயத்தை குறிக்கிறது..

Facebook Comments

Related Articles

Back to top button