Spotlightசினிமாவிமர்சனங்கள்

D3 – விமர்சனம் 2.75/5

பாலாஜி இயக்கத்தில் ப்ரஜின், வித்யா பிரதீப், சார்லி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “D3”. மூன்று பாகங்களாக உருவாகியிருக்கும் இப்படத்தின் மூன்றாவது பாகம் தான் இந்த “D3”.. இதன் முந்தைய பாகங்கள் இனி தான் வெளியாகுமாம் என்ற தகவலைக் கூறிக் கொண்டு படத்தின் விமர்சனத்திற்குள் போய்விடலாம்.

கதைப்படி,

காவல்துறை ஆய்வாளராக வருபவர் நாயகன் ப்ரஜின். பணிமாறுதல் பெற்று தனது மனைவி வித்யா ப்ரிதீப்புடன் குற்றாலத்திற்கு வருகிறார்.. அங்கு, லாரியில் அடிபட்டு ஒரு பெண் இறந்து விடுகிறார். இந்த வழக்கை கையில் எடுத்து விசாரிக்க ஆரம்பிக்கிறார் ப்ரஜின்.

மீண்டும் ஒரு விபத்து நடக்கிறது. அந்த விபத்தின் மீதும் ப்ரஜினுக்கு சந்தேகம் எழுகிறது. இரு விபத்திற்கும் இருக்கும் ஒரு ஒற்றுமையை கண்டுபிடிக்கிறார். இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கிறார். குற்றாலத்தில் இதற்கு முன் நடந்த அனைத்து விபத்து வழக்கையும் கையில் எடுத்து விசாரிக்கிறார் ப்ரஜின்.

குற்றவாளி யார் என நெருங்குவதற்கு முன், ப்ரஜினின் மனைவியாக வரும் வித்யா ப்ரதீப்பையும் குற்றவாளிகள் கொலை செய்து விடுகின்றனர்.

யார் இந்த கொலைகளை செய்கிறார்கள்.? எதற்காக செய்கின்றனர்.? என்பதை ப்ரஜின் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் ப்ரஜி, இதற்கு முன் நடித்த படங்களைக் காட்டிலும் 100 மடங்கு அதிகமான உழைப்பை இந்த படத்திற்காகக் கொடுத்திருக்கிறார். யதார்த்தமாக நடித்து தனது கேரக்டரை நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சியிலும் தனது அதிரடியை காட்டியிருக்கிறார் ப்ரஜின்.

வித்யா ப்ரதீப்பிற்கு சொல்லும்படியாக பெரிதான காட்சிகள் எதுவும் இல்லை என்றாலும், தோன்றிய காட்சிகளில் நச் என நடித்திருக்கிறார்.

மருத்துவராக வந்த ராகுல் மாதவ் ஸ்டைலிஷாக வந்து மிரட்டியிருக்கிறார். ஆரம்பத்தில் விறுவிறுப்பாக செல்லும் கதையானது, இரண்டாம் பாதியில் சற்று தொய்வடைய வைத்திருப்பது வேதனை தான்.

கதை ஆரம்பித்த விதமும் அது சென்ற விதமும் ஒரே நேர்க்கோட்டில் சென்று கொண்டிருக்கும் போது, பல கிளைகளில் பின் பயணப்படுவது தான் கதையின் ஓட்டத்திற்கு விழுந்த பெரிய அடி..

நூலைப் பிடித்தாற் போல் ஒரே நேர்க்கோட்டில் கதை சென்றிருந்தால் D3 படமானது துருவங்கள் பதினாறு, வி 1 கேஸ் படங்களின் வரிசையில் சென்று நின்றிருந்திருக்கும்.

ஒரு சில குறைபாடுகள் எட்டிப் பார்த்தாலும், த்ரில்லர் கதை பிடிக்கும் ரசிகர்கள் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று இப்படத்தினைப் பார்த்தால் அது உங்களை நிச்சயம் ஏமாற்றாது.

இரவு நேரக் காட்சிகளை ஒளிப்பதிவாளர் மணிகண்டன் மிகவும் நேர்த்தியாக கையாண்டு காட்சிக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

பரபரப்புக்கு இசையமைப்பாளரின் பின்னணி இசை கைகொடுத்திருக்கிறது. ராஜா ஆறுமுகத்தின் தனது எடிட்டிங்கை ஷார்ப் ஆக கொடுத்திருக்கிறார்.

மற்றபடி D3 – ஆரம்பிக்கும் போது நல்லா இருந்துச்சி. அப்புறம் போக போக….

Facebook Comments

Related Articles

Back to top button