Spotlightசினிமா

வைரலாகும் நானியின் “தீக்காரி” பாடல்

ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில், நேச்சுரல் ஸ்டார் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில், பான் இந்தியத் திரைப்படமாக உருவாகி வருகிறது “தசரா”.

படத்தின் இரண்டாவது சிங்கிள் தீக்காரி பாடல் வெளியாகியுள்ளது. மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி இப்படத்தை மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார். இயக்குநர் ஶ்ரீகாந்த் ஒதெலா இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

“தசரா” திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 30 மார்ச் 2023 வெளியாகிறது.

நடிகர்கள் : நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, சாய் குமார், ஜரீனா வஹாப் மற்றும் பலர்.

Facebook Comments

Related Articles

Back to top button