Spotlightவிமர்சனங்கள்

திருச்சிற்றம்பலம் – விமர்சனம் 4/5

னுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தான் மித்ரன் ஜவஹர். இவரது இயக்கத்திலேயே “திருச்சிற்றம்பலம்” படமும் உருவாகியிருக்கிறது. இன்று உலகம் முழுவதும் இப்படம் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில், தனுஷ், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறது.

கதைப்படி,

தாத்தா பாரதிராஜா, அப்பா பிரகாஷ்ராஜ், மகன் தனுஷ் மூவரும் ஒரு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். பிரகாஷ்ராஜ் செய்த சிறு தவறால், இவர்கள் குடும்பத்தில் பெரிய தவறு நடந்தேற, பத்து வருடமாக தனது அப்பா பிரகாஷ்ராஜ்ஜிடம் பேசாமல் இருக்கிறார் தனுஷ். தனுஷிற்கு சிறுவயது முதல் பக்கத்துவீட்டு தோழியாக வருகிறார் நித்யா மேனன்.

தனுஷின் முதல் காதல் ராஷி கண்ணாவுடன் முறிந்து போகிறது. இரண்டாவது காதல் ப்ரியா பவானி சங்கருடன் அதுவும் முறிந்து போகிறது. இவள் தான் நமக்கு செட் என நினைத்து தோழியாக பழகிய நித்யா மேனனை காதலிக்க அது கைகூடியதா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் தனுஷ், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அந்த கதாபாத்திரமாகவே மாறக்கூடியவர். இந்த படத்திலும், அதே போன்று தான். கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

காதல், எமோஷன், சண்டைக் காட்சி, நடனம், காமெடி என ஒவ்வொரு காட்சியிலும் மிளிர்கிறார் தனுஷ்.

அனிருத்தின் பாடல்கள் ஏற்கனவே பட்டிதொட்டியெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருந்தது. பின்னணி இசையிலும் தனக்கான முத்திரையை முத்தாக கொடுத்திருக்கிறார் அனிருத்.

ஓம் பிரகாஷின் ஒளிப்பதி கலர்ஃபுல். ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க வைத்திருப்பதில் ஒளிப்பதிவாளரின் பங்கு அளப்பறியது.

பிரசன்னாவின் படத்தொகுப்பு ஷார்ப். கதைக்கு தேவையானதை மட்டும் கொடுத்து படத்தின் ரசனையை ஏற்றியிருக்கிறார்.

நீங்க தனியா போவீங்களோ இல்ல ஜோடியா போவீங்களோ … ஆனா போங்க .. உங்களுக்கு ஏதாவது ஒரு வழியில இந்த திருச்சிற்றம்பலம் ஒரு ஃபீல் கொடுத்துடும்..

அனிருத் மியூசிக் “மனக்குள்ள குத்தி குத்தி குத்தி… என்னமோ பண்ணிடுச்சி…” நம்மை ஃபீல் பண்ண வச்சதுல அனிருத்தோட பங்கு ரொம்பவே பெருசு…

தனுஷ் எவ்ளோ நேரம் சீன்ல வர்ராறோ.. அதுக்கு சமமா நித்யா மேனனும் வந்துட்டு போறாங்க… வந்துட்டு போயிருக்காங்கன்னு சொல்லக்கூடாது வாழ்ந்துட்டு போயிருக்காங்கன்னு தான் சொல்லனும்…

ஆங்காங்கே தெறிக்கிறது பாரதிராஜாவை சுற்றி நடக்கும் காமெடிக்கூத்துகள்… இந்த காமெடிகளுக்கெல்லாம் ஓகே சொன்ன பாரதிராஜாவுக்கு நன்றி தான் சொல்லணும்…

நடிப்பு அரக்கர்கள் போல, பாரதிராஜாவும் பிரகாஷ்ராஜும் ஸ்கிரீனில் விளையாடியிருக்கிறார்கள்…

ஒரு சில காட்சிகள் என்றாலுமே ராஷி கண்ணாவும் ப்ரியா பவானி சங்கரும் அழகு தேவதைகளாக வந்து செல்கிறார்கள்…

வழக்கமான கதை என்றாலும், திரைக்கதையில் ஒரு உணர்வை கொடுத்து நம்மை படத்தில் உலா வர வைத்த இயக்குனருக்கு ஆகப்பெரும் வாழ்த்துகள்.

படத்தின் ஒரு சில இடங்களில் உங்கள் கண்களில் நிச்சயம் ஈரம் எட்டிப் பார்க்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை..

திருச்சிற்றம்பலம் – காதலர்களுகான முழு விருந்து..

Facebook Comments

Related Articles

Back to top button