Spotlightசினிமா

நல்ல விமர்சனம் இருந்தும் தியேட்டரில் காத்து வாங்கும் “J.பேபி”!

சுரேஷ் மாரி இயக்கத்தில் ஊர்வசி, தினேஷ், மாறன், ஜெய மூர்த்தி, ஏழுமலை, தக்‌ஷா, மெலடி டோர்காஸ், மாயஸ்ரீ அருண் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் தான் ”ஜே. பேபி”.

அம்மா செண்டிமெண்ட் வைத்து குடும்ப உறவுகள் எவ்வளவு முக்கியமானது என்பதை வலி நிறைந்த கதையோடு உருவாகியிருந்த இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியிருந்தார் படத்தின் இயக்குனர்.

கடந்த வெள்ளியன்று நல்லதொரு வரவேற்பு பெற்றிருந்தாலும், தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் திரையரங்குகளில் கூட்டத்தின் வரவு குறையத் தொடங்கியது.

படம் வெளியான ஐந்தாவது நாளான இன்று திரையரங்குகளில் காட்சிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது. டிக்கெடி புக்கிங்கும் பெரிதளவில் இல்லாமல் காட்சிகள் காத்து வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது இந்த J.பேபி திரைப்படம். இதனால் செய்வதறியாது இருக்கின்றனர் படக்குழுவினர்.

மலையாளத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தமிழகத்தில் அநேக திரையரங்குகளில் வெற்றிகரமாக இன்னமும் ஓடிக் கொண்டிருப்பதால், அப்படத்திற்கே திரையரங்குகள் முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Facebook Comments

Related Articles

Back to top button