Spotlightசினிமா

மலையாள நடிகைகளுடன் கூட்டணியை தொடரும் தனுஷ்

தனுஷ் நடித்து அண்மையில் வெளியான படம் அசுரன். இதில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.

இவர் ஏற்கெனவே நயன்தாரா, அமலாபால், மஞ்சு வாரியர், மடோனா செபஸ்டியன், அனுபமா ஆகிய மலையாள நடிகைகளுடன் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படத்திலும் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஜோடியாக நடித்துள்ளார்.

தற்போது இந்த வரிசையில் ரெஜிஷா விஜயன் என்பவர் இணைந்துள்ளார்.

தன் முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதை பெற்றுள்ள இவர் தான் தனுஷின் அடுத்த பட நாயகியாம்.

மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

Dhanush and Maari selvaraj combo movie heroine updates

Facebook Comments

Related Articles

Back to top button