நடிகராகவும் எழுத்தாளராகவும அறியப்பட்டவர் போஸ் வெங்கட். சின்னத்திரை மூலம் தனது பயணத்தை ஆரம்பித்த போஸ் வெங்கட், தொடர்ந்து வெள்ளித்திரையிலும் தனது அசாத்திய திறமையை நிரூபித்தார்.
தொடர்ந்து, அடுத்தகட்டமாக “கன்னி மாடம்” என்ற படத்தை இயக்கி, பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் போஸ் வெங்கட்.
இப்படம், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு பல விருதுகளையும் வாரிக் குவித்தது.
இப்படத்தின் நாயகன் ஸ்ரீராம் கார்த்தி சிறந்த நடிகருக்கான விருதையும் பல மேடைகளில் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது அடுத்த இயக்கத்திற்கான பணிகளில் மிகவும் மும்முரமாக இறங்கியிருக்கிறார் போஸ் வெங்கட்.
மா.பொ.சி. என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் விமல் நாயகனாக நடிக்கிறார்.
படத்தின் பூஜை வரும் 26 ஆம் தேதி அறந்தாங்கியில் நடைபெறவிருக்கிறது. SSS Pictures சார்பில் எஸ் சிராஜ் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறார்.
விழாவில்,
மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
மாண்புமிகு எஸ் ரகுபதி அவர்கள்,
சட்டத்துறை அமைச்சர் (சட்டம், நீதி மன்றங்கள் சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம்)
சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள்,தமிழக சுற்றுச்சூழல் துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர்
திரு. ST ராமச்சந்திரன் அவர்கள்,
அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர்
திரு. MM அப்துல்லா அவர்கள்,
மாநிலங்கலவை உறுப்பினர்
திரு. T.G.தியாகராஜன் அவர்கள்,
தயாரிப்பாளர், சத்தியஜோதி பிலிம்ஸ்
திரு. M.சரவணன் – திரு. T.சரவணன்
தயாரிப்பாளர்கள், S FOCUSS PRODUCTION
உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.