Spotlightசினிமா

சாருஹாசனுக்கும் மத்திய அரசு விருது வழங்க வேண்டும் – இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி வேண்டுகோள்!

நேற்று முன்தினம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு திரையுலகின் வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கப்படும் என அறிவித்தது. இதனால், ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே ரஜினிகாந்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், தாதா 87 படத்தின் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி அவர்கள் 90 வயதிலும் தொடர்ந்து நடித்து வரும் சாருஹாசன் அவர்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது, ‘1975 ல் தமிழ் சினிமாவில் அறிமுகம்ஆனார் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள். தொடர்ந்து சினிமா துறையில் நடித்து வருகிறார் .நேற்று முன்தினம் அவருக்கு “வாழ்நாள் சாதனையாளர்” விருது மத்திய அரசுஅறிவித்ததில் மகிழ்ச்சி. இந்த தருணத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் என் அன்பான வேண்டுகோள் உதிரிப்பூக்கள் படத்தில் மூலம் அறிமுகமான திரு சாருஹாசன் அவர்கள் தனது முதுமை காரணம் காட்டாமல்
90 வயதிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்திய நடிகர்களில் வயதான நடிகர் இவர்தான்.

1987ஆம் ஆண்டில் கிரிஷ் கசரவல்லி இயக்கிய ” தபெரனா கதெ ” என்னும் கன்னடத் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி, சிறந்த நடிகருக்கான “தேசிய விருது ” பெற்றார் மேலும் சிறந்த நடிகருக்கான கர்நாடக அரசு திரைப்பட விருது பெற்றுள்ளார்.

உலக அளவில் பார்க்கும் போதும் 90 வயதில் தற்சமயம் இவர் தான் நடித்து வருகிறார்.. இந்திய நடிகரின் இந்த சாதனையை உலகம் அறிய செய்ய வேண்டும்.
சாருஹாசன் அவர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிட வேண்டும்
என்பது என்னை போன்றா சினிமா ஆர்வலர்கள்களின் அன்பான வேண்டுகோள்..’ என்று கூறியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button