
நாயகன் விதார்த் நடிப்பில் கே எல் கண்ணன் இயக்கியிருக்கும் திரைப்படம் தான் “ஆற்றல்”. இப்படத்தில், ஷிரிதா ராவ், வம்சி கிருஷ்ணா, வித்யூ ராமன், சார்லி என பலர் நடித்துள்ளனர்..
செவ்வந்தி மூவிஸ் நிறுவனத்தின் சார்பாக ஜே மைக்கேல் இப்படத்தை தயாரித்துள்ளார்.
கதைப்படி,
மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆன விதார்த், ஆளில்லா கார் ஒன்றை உருவாக்க ஆசைப்படுகிறார். சாதாரண மெக்கானிக் சார்லியின் மகனான விதார்த்தால் தனது வறுமை காரணமாக அந்த காரை உருவாக்க கஷ்டப்படுகிறார்.
அச்சமயத்தில், தந்தையான சார்லி, பைனான்சியர் ஒருவரிடம் அந்த பணத்தை பெற்று வரும் வேளையில், சாலையில் இறந்துவிடுகிறார்.
இதனால் உடைந்து போகும் விதார்த், அப்பாவின் தொழிலை கையில் எடுக்கிறார்.
அதேவேளையில், 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று இரு சக்கரவாகனங்களில் சென்று பல வீடுகளில் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தை நடத்தி வருகிறது. இக்கும்பலுக்கும் தனது தந்தையின் மரணத்திற்கும் தொடர்பு இருக்கும் என்றெண்ணி அக்கும்பலை கண்டுபிடிக்க ஆரம்பிக்கிறார் விதார்த். அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை. தனது கனவு காரினை விதார்த் உருவாக்கினாரா இல்லையா.?
எப்போதும் எதார்த்தமான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விதார்த், இப்படத்திலும் அதையே செய்திருக்கிறார். காதல் காட்சியிலும் நடனத்திலும் இன்னும் பெரிதாகவே மெனக்கெடல் செய்து கொள்ளுங்கள் விதார்த்.
நாயகியாக நடித்துள்ள ஷிரிதா ராவ் காட்சிகளில் அழகாக வந்து செல்கிறார். சிறு பட்ஜெட் படங்களுக்கான வில்லன் என்ற முத்திரை குத்தப்பட்ட வம்சி கிருஷ்ணா, வழக்கமான நடிப்பை கொடுத்திருக்கிறார். பெரிதான ஒரு மாற்றம் இதில் ஏதும் இல்லை.
அஸ்வின் ஹேமந்த் இசை பெரிதளவில் இல்லாதது சற்று ஏமாற்றமே.. கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது.
வித்தியாசமான கதையை கையில் எடுத்த இயக்குனர் கே எல் கண்ணனின் அதை இன்னும் சுவாரஸ்யமாகவும், ரசிக்கும்படியாக கொடுத்திருந்தால் “ஆற்றலை” பெரிதாக கொண்டாடியிருக்கலாம்.
விதார்த் நடிப்பில் மிகவும் முக்கியமான மைல்கல்லாக இருக்க வேண்டிய ஆற்றல் சற்று வேகம் குறைந்திருந்தது ஏமாற்றமே..





