
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ், ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “திருச்சிற்றம்பலம்”.
இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கியிருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தின் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளதால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.
புலகம் முழுவதும் படம் நாளை திரைக்கு வர இருக்கிறது. தனுஷின் திரைப்படங்கள் திரைக்கு வந்து வருடங்கள் ஆன நிலையில், தற்போது திருச்சிற்றம்பலம் வர இருப்பதால் இதை திருவிழா போல் கொண்டாட ரசிகர்கள் எண்ணியுள்ளனர்.
இதற்காக, மிகப்பெரும் கட்-அவுட், போஸ்டர்கள் மற்றும் மேள தாளங்கள் என கொண்டாட்டத்திற்கு தயார் நிலையில் இருக்கின்றனர் தனுஷின் ரசிகர்கள்..
வேலையில்லா பட்டதாரி போன்று குடும்ப ரசிகர்களை இப்படம் வெகுவாக கவரும் என்பது படக்குழுவினரின் பெரிய நம்பிக்கையாக உள்ளது.