Spotlightதமிழ்நாடு

“எத்தனை பேரை கைது செய்வீர்கள்”… கொந்தளித்த ஸ்டாலின்!!

தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசைக்கு எதிராக மாணவி சோபியா என்பவர் பாஜக ஒழிக என்று முழக்கமிட்டதால், அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்நிகழ்வுக்கு தமிழகம் முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. சமூக வலைதளங்களில் அதிகமானோர் இந்நிகழ்வுக்கு தொடர்ந்து கண்டனக் குரல்கள் கொடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ ஜனநாயக விரோத – கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்!

அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்?

நானும் சொல்கின்றேன்!

“பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!”” என்று பாஜக-வை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button