Spotlightசினிமா

துல்கர் சல்மானின் ‘AOT’ திரைப்படம் நவம்பர் 20ல் ரிலீஸ் – எதிர்பார்ப்பை எகிறவைத்த டீசர்!

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஏ ஒ டி’ (AOT). பவன் சாதினேனி இயக்கியுள்ள இப்படத்தில் சாத்விகா வீரவல்லி கதாநாயகியாக அறிமுகமாகிறார். நடிகை ஸ்ருதி ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

குடும்பப் பார்வையாளர்களைக் கவரும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, லைட்பாக்ஸ் மீடியா சார்பில் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் தயாரித்துள்ளனர். கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா நிறுவனங்கள் வழங்குகின்றன.

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘சீதா ராமம்’ படத்தைத் தொடர்ந்து துல்கர் சல்மான் – ஸ்வப்னா சினிமா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ‘AOT’ திரைப்படம், நவம்பர் 20ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

YouTube Teaser: Watch AOT Teaser

Facebook Comments

Related Articles

Back to top button