
விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ (Slum Dog: 33 Temple Road) திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.
பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் தயாரிக்கும் இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். மேலும் தபு, துனியா விஜய், ஜரினா வஹாப், பிரம்ஹாஜீ, வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்க, சாம் கே. நாயுடு ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நூஜில்லா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ள ‘ஸ்லம் டாக்’ படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.





