Spotlightசினிமாவிமர்சனங்கள்

டங்கி விமர்சனம் 3/5

இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான், டாப்சி நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் டங்கி.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் சி கே முரளிதரன், மனுஷ் நந்தன், அமித் ராய் உள்ளிட்ட மூவரும்.

இசை: பாடல்கள் – பிரிதாம், பின்னணி இசை – அமன் பண்ட்

ராணுவத்தில் இருந்த போது குண்டு பாய்ந்த தன்னை காப்பாற்றிய நண்பனை காண வருகிறார் ஷாருக்கான்.

விபத்தில் நண்பனை இறந்ததை அறிந்து மனம் உடைகிறார் ஷாருக்கான். மேலும், நண்பனின் தங்கை டாப்சி உட்பட குடும்பத்தினர் கடும் கடன் தொல்லையால் அவதிப்படுகின்றனர் என்பதை அறிகின்றார்.

டாப்சிக்கு லண்டனில் வேலை பார்க்க ஆசைப்படுகிறார். ஆனால், அவரால் அங்கு செல்லமுடியவில்லை.

திருட்டுத்தனமாக டாப்சி மற்றும் அவரது நண்பர்களை லண்டனுக்கு அழைத்துச் செல்கிறார் ஷாருக்கான். அதன்பிறகு அங்கு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனான ஷாருக்கான், தனது நடிப்பின் உச்சத்தை காட்டியிருக்கிறார். பல இடங்களில் சோலோ காட்சிகளை எளிதாக நடித்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார்.

ஒரு ராணுவ வீரனாக லண்டன் நீதிமன்றத்தில் பேசுவதாக இருக்கட்டும், தனது காதலை டாப்சியிடம் சொல்லும் இடத்திலாவது இருக்கட்டும், என பல இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார் ஷாருக்கான். 1990 மற்றும் 2020 காலகட்டத்தை மிக அழகாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.

ஒளிப்பதிவு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரும் பலம்.

ஷாருக்கானுக்கு போட்டி போடும் நடிப்பைக் கொடுத்து கைதட்டல் வாங்கியிருக்கிறார் நடிகை டாப்சி.

நண்பர்களாக உடன் நடித்தவர்களும் ஸ்கோர் செய்திருக்கின்றனர்.

டங்கி – நட்பு, காதல், நாடு, உணர்வு

Facebook Comments

Related Articles

Back to top button