பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ளது காலா. படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து வரும் ஏப்ரல் 27ஆம் தேதி படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இப்படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தில் சண்டைக் காட்சி இயக்குனராக பணிபுரிந்துள்ள மாஸ்டர் திலீப் சுப்புராயன் சமீபத்தில் படத்தினை குறித்த சில சுவாரஸ்யமாக செய்திகளை வெளியிட்டுள்ளார்.
ரஜினி சார் மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்திருப்பதாகவும்.. படத்தில் மொத்தம் ஆறு சண்டைக்காட்சிகள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல், இதுவரையில் ரஜினி படங்களில் இல்லாத அளவிற்கு இதில் சண்டைக்காட்சிகள் பயங்கர மாஸாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த சண்டைக் காட்சிகளை பார்த்து ரஜினியே மிரண்டு போனாராம்.
இதனால் ரசிகர்கள் மேலும் உற்சாகமடைந்துள்ளனர்.