Spotlightஇந்தியாசினிமாதமிழ்நாடு

கொரோனா இல்லாத மாவட்டமாகிறது ஈரோடு; முக்கியச் செய்திகள் படிக்கலாமே!

மிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறி உள்ளது.

கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி செப்டம்பர் இறுதியில் தயாராகிவிடும் – இந்திய ஆராய்ச்சி நிறுவனம் , புனே.

UPSC முதல்நிலை தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் அறிவிப்பு.

ஊரடங்கு முடிவுக்கு வந்தபிறகு எஞ்சியுள்ள சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் 16 மாநிலங்களில் கொரோனா தொற்று பதிவாகவில்லை.கடந்த 7 நாட்களில் 80 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்

கொரோனா தொற்றால் மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு மருத்துவர் பலி.

மே 3-ம் தேதி வரை கடைகளுக்கு விடுமுறை விடுவதாக சிறு வியாபாரிகள் முடிவு.

சென்னை கோயம்பேடு சந்தையில் 600 மொத்த விற்பனை கடைகள் செயல்பட அனுமதி – சிஎம்டிஏ.

கோயம்பேடு மர்க்கெட்டில் இயங்கிவரும் 1,500 கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

ஆன்லைனில் சட்டக்கல்லூரி பாடத்திட்டங்கள் நடத்த தமிழக சட்டத்துறை முடிவு : கூகுள் கிளாஸ் ரூம், ஜூம், வாட்ஸ் அப் ஆகிய செயலிகள் மூலம் இந்தாண்டிற்கான பாடத்திட்டங்களை கற்பிக்க முடிவு.

லேசான கொரோனா அறிகுறிகள் இருந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தைச் சேர்ந்த 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று : நுங்கம்பாக்கம் காவல்நிலையம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு.

தமிழக அளவில் கொரோனா பாதிப்புகளில் சென்னை தொடர்ந்து முதலிடம்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமணையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் தப்பியோட்டம்.

டெல்லியில் நிதி ஆயோக் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி.

ஊரடங்கால் கிடைக்கப்பெற்ற நன்மைகளில் முக்கியமானது மது இல்லாத தமிழர்களாக நாம்
மாறியிருப்பது தான் – தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.

டெல்லியில் உச்சநீதிமன்ற ஊழியர் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன்
காணொலி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.

காய்கறி சந்தைகளில் தனி மனித இடைவெளியை மக்கள் முறையாக பின்பற்றுவதில்லை – தமிழக முதல்வர் பழனிசாமி.

கொரோனா தடுப்புப் பணியிலுள்ள அதிகாரிகளின் செயல்பாடு பாராட்டத்தக்கது – முதல்வர் பழனிசாமி.

144 தடை உத்தரவால் சீர்காழி சட்டநாதர் கோவிலில் நடைபெறும் திருமுலைப்பால் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் 40 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க அமைத்த 12 குழுக்களை சேர்ந்த அதிகாரிகளுடன்
தமிழக முதல்வர் ஆலோசனை.

காரைக்குடி உள்ள கொப்புடையநாயகி திருக்கோயில் பூச்சொரிதல் விழா மற்றும் வைகாசி பெருவிழா ரத்து செய்யப்படுவதாக திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு.

சென்னை பாரிஸ் கார்னரில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்யும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு.

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 482 ஆக உயர்வு.

ஆந்திராவில் ஒரே நாளில் மேலும் 82 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி உள்ளது.

கொரோனா நோய்த் தொற்றின் தீவிரம் அறியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கிறார்கள் – தமிழக முதலமைச்சர் பழனிசாமி.

மக்கள் உயிரோடு விளையாடாமல், அவர்களின் நலன் பேணுங்கள் என்பது மலிவான அரசியல் அல்ல ஜனநாயக உரிமை – துரைமுருகன் திமுக.

மலிவுவிலை நாப்கின் உற்பத்திப் பணி பாதிக்கப்பட்டுள்ளதால் அதனைத் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என PAD MAN முருகானந்தம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு பத்திரிகையாளா்கள் உயிரிழந்தால், அவா்களின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் – ஒடிஷா மாநில முதல்வா் நவீன் பட்நாயக்.

தெலங்கானாவில் 21 மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் இல்லை – முதல்வர் சந்திர சேகர ராவ்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மும்பை காவல்துறையினருக்கு உதவும் வகையில் இந்தி நடிகர் அக்சய் குமார் 2 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.

இலங்கையில் உயிரிழந்த தந்தையின் இறுதி சடங்கை வீடியோ காலில் பார்க்க வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் 10 விதமான மரபியல் மாற்றங்களை எடுத்துள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் தகவல்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது.

சென்னை மத்திய ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்தில் முன்னேற்பாடு நடவடிக்கையாக, இரயில்கள் இயக்கப்பட்டால் தனிநபர் இடைவெளியை பின்பற்றும் விதமாக 6 அடிக்கு ஒரு கோடு வரையப்பட்டு வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button