Spotlightசினிமா

வெளிவருகிறது ‘ENPT”; கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்.. ரிலீஸ் தேதி இதோ..!

சில வருடங்களுக்கு முன் பூஜை போட்டு ஆரம்பிக்கப்பட்ட படம் தான் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. எந்த நேரத்தில் ஆரம்பித்தார்களோ, பொருளாதாரம் இல்லாமல் படமோ பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது.

இப்படத்தினை தனுஷ் நடிக்க கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரிக்கவும் செய்தார். பின், ஒரு வழியாக படத்தினையும் முடித்தனர் படக்குழுவினர்.

தர்புகா சிவாவின் இசையில் ஏற்கனவே பாடல்கள் ஹிட் அடித்த நிலையில், படம் எப்போது வரும் என ரசிகர்கள் ஏங்கி கொண்டிருந்த நிலையில், இப்படம் வரும் இம்மாதம் 26ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தவாரத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என தெரிகிறது. இதனால், தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button