
அதிமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் ஆகவே நேற்று வெளியாக வேண்டிய இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியாகாமல் இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு முதல்வரும் துணை முதல்வரும் அதிமுக அலுவலகத்தில் வருவதாக இருந்தது. இந்த மோதல் காரணமாக முதல்வர் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லையாம்.
தொடர்ந்து வேட்பாளர்கள் பட்டியல் தயார்படுத்தும் பணியில் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்களாம்.
Facebook Comments