கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடிப்பதில் வல்லவர் சமந்தா. அப்படியாக அவர் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்துள்ள படம்தான் ‘யு டர்ன்’.
கதை: சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தால் தொடர்ந்து பல கொலைகள் நடந்து வருகின்றன. அந்த கொலைகளை பற்றி பத்திரிக்கையாளராக வரும் சமந்தா எழுதி வருகிறார்.
இந்நிலையில், ஒரு கொலை சம்பவத்தில் போலீஸார் சமந்தாவை கைது செய்கின்றனர். இந்த விசாரணையை ஆதி மேற்கொள்கிறார்.
யார் அந்த கொலையை செய்கிறார்கள்..?? சமந்தா இந்த கொலை சம்பவத்தில் இருந்து தப்பித்தாரா..??? என்பதே படத்தின் மீதிக் கதை.
விமர்சனம்: இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடித்ததற்கு சமந்தாவிற்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம். போலீஸார் அவரை கைது செய்ததும், அந்த நேரத்தில் சமந்தா படும் தவிப்பு அப்ளாஷ்.
நேர்மையான, மிடுக்கான போலீஸ் அதிகாரியாக ஆதி விசாரணை செய்வது – சூப்பர்
யாரும் யூகிக்க முடியாத ட்விஸ்ட், கதையின் போக்கு என அனைத்தும் படத்திற்கு மிகப்பெரிய பலம்தான்.
பாடல்கள் இல்லாமல், படத்தின் பின்னனி இசையில் மட்டுமே மிரட்டியிருக்கிறார் இசையமைப்பாளர்.
சிறிய கதையை எடுத்தாலும், அதில் ஒரு அபாயகரமான, நடுங்கக்கூடிய ஒரு உண்மையை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
இப்படத்தினை பார்த்த பிறகாவது ‘இச்சம்பவத்தை’ யாரும் செய்யமாட்டார்கள் என நம்புவோம்..
என்ன சம்பவம் என்பதை ‘தயவு செய்து’ தியேட்டரில் சென்று பார்க்கவும்
யு டர்ன் – வாகனம் ஓட்டும் அனைவரும் இப்படத்திற்காக தியேட்டருக்கு ஒரு முறை யு-டர்ன் அடியுங்கள்….