
கொடைக்கானலில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால்
மலைப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலால் 12,000 மின் கம்பங்கள் சேதம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்
கஜா புயலுக்கு கடலூர் மாவட்டத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆணைகிரிசோலை பகுதியில் மரம் விழுந்ததால் கொடைக்கானல் – பழனி சாலையில் போக்குவரத்து பாதிப்பு , மரத்தை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
மதுரையில் கனமழை பெய்து வருவதால் மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடியில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பிலான 10,000 வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன.
புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவு
வேதாரண்யம் பகுதிக்கு மேலும் ஒரு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்தது.
திருச்சியில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை திருச்சி ஏர் இந்தியா விமான சேவை ரத்து
கஜா புயலால் காரைக்கால் திருப்பட்டினம் அருகே ஒரு கப்பல் தரைதட்டி உள்ளது
கப்பலில் ஊழியர்கள் 10 பேர் உள்ளதாக தகவல்
10 ஊழியர்களையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது