சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் அருள் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தினை ஜேடி-ஜெர்ரி ஆகிய இரட்டை இயக்குனர்கள் இயக்கவிருக்கிறார்கள்.
ஏற்கனவே இந்த ஜோடி உல்லாசம், ஷெரின் நடித்த விசில் ஆகிய படங்களை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் ஹீரோயினாக ஹன்சிகா நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வேகமாக பரவியது. இந்த தகவல் கேள்விபட்ட ஹன்சிகா மிகவும் கடுப்பானாராம். இதில் தான் நடிக்கவில்லை என்று வெளிப்படையாகவே தற்போது அறிவித்துள்ளார்.
இப்படத்திற்கு ஹரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
Facebook Comments