
மேயாத மான், ஆடை என்ற வித்தியாசமான படங்களை இயக்கியவரான ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “குலுகுலு”. டைமிங்க் காமெடியின் கிங்’காக இருக்கும் சந்தானம் இப்படத்தில் என்ன மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்பதை விமர்சனம் மூலம் பார்த்துவிடலாம்.
கதைப்படி,
அமேசான் காட்டுப்பகுதியில், அழிந்து போகும் ஒரு பழங்குடி இனத்தில் பிறந்தவர் சந்தானம். அப்பகுதியில், அம்மக்களை அடித்து விரட்டிய பிறகு, தாய் தந்தையரை இழந்து நாடோடியாக நாடு நாடாக சுற்றித் திரிகிறார் சந்தானம். பல மொழிகளை கற்றுக் கொள்கிறார். இறுதியாக தமிழையும் கற்றுக் கொண்டு தமிழ்நாட்டிலேயே தங்கி விடுகிறார். உதவி என்று யார் கேட்டாலும் ஓடி ஓடிச் சென்று செய்து தரும் பண்புடையவர் சந்தானம்.
அப்படியாக நண்பன் ஒருவனை இலங்கை தமிழர் கும்பல் ஒன்று கடத்திச் சென்று விடுகிறது. தன் நண்பனை கண்டுபிடித்துத் தருமாறு சந்தானத்திடம் வருகிறார்கள் மூன்று பேர். நண்பனை கண்டிபிடிக்கச் சென்ற சந்தானத்திற்கு மிகப்பெரும் சிக்கல் ஏற்படுகிறது.
அது என்ன மாதிரியான சிக்கல்.. அந்த சிக்கலில் இருந்து சந்தானம் மீண்டு வந்தாரா .? என்பதே படத்தின் மீதிக் கதை.,
மேயாத மான், மற்றும் ஆடை எடுத்த இயக்குனரிடம் இருந்து சற்று வித்தியாசமான கதையை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு இப்படம் சற்று ஏமாற்றத்தைத் தான் கொடுத்திருக்கிறது. ஒரு சில இடங்களில் காமெடி நன்றாக கைகொடுத்திருக்கிறது என்றாலும், பல இடங்களில் கொஞ்சம் சோதனையையும் செய்திருக்கிறது. வழக்கமான சந்தானம் படம் என்று நம்பி வருபவர்களுக்கு இப்படம் ஏமாற்றம் தான்.
கதையில் இன்னும் சற்று கவனம் செலுத்திபயணப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. சந்தோஷ் நாராயணனின் இசை படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.
டார்க் காமெடி என்ற பெயரில் சோதனை செய்வதை நம்மால் ஏற்க முடியவில்லை.
அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, ஜார்ஜ் மர்யன், சைனீஸ் உள்ளிட்டவர்கள் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள். பல இடங்களில் இயக்குனரின் வசனங்கள் முத்திரை பதித்து கைதட்டல் பெறுகிறது.
காட்சிகளின் மெனக்கெடல்கள் கண்முன்னே நன்றாக தெரிகிறது. அதற்கான பலனும் கிடைத்திருக்கிறது.
இயக்குனரின் வழக்கமான படமாக இருந்தால் பார்க்கலாம் என்றாலும் ஏமாற்றம் தான்
நாயகனின் வழக்கமான படமாக இருந்தால் பார்க்கலாம் என்றாலும் ஏமாற்றம் தான்
இருவரும் இணைந்து இது வேற மாதிரியான படம் என்று படைத்திருக்கிறார்கள். டார்க் காமெடி ரசிக்கும் ரசிகர்களுக்கு இப்படம் எந்த இடத்திலும் ஏமாற்றம் கொடுக்காது என்று கூறிக் கொண்டு..
குலு குலு – காமெடிக்கு சரவெடி..