Spotlightசினிமா

கோலாலம்பூரை அதிரவைத்த GVM இசை விழா! 5,000 ரசிகர்களுடன் 25 ஆண்டுகள் கொண்டாட்டம்!

இந்தியத் திரையுலகில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால திரைப்பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா – GVM-இன் 25 ஆண்டுகள்’ இசை நிகழ்ச்சி மலேசியாவின் கோலாலம்பூரில் அக்டோபர் 10ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சென்னையில் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 5,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்டு உற்சாகமாகக் கொண்டாடினர்.

இந்த இசை விழாவில் கார்த்திக், ஸ்ருதி ஹாசன், கிரிஷ், பிளேஸ், சைந்தவி, பால் டப்பா, சத்ய பிரகாஷ், ஆதித்யா ஆர்.கே., ஹரிப்ரியா உள்ளிட்ட பிரபல பாடகர்கள் GVM திரைப்படங்களின் மறக்க முடியாத பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

கேபா ஜெரமையா, லலித் தல்லூரி, மனோஜ் குமார் உள்ளிட்ட இசைக் கலைஞர்களின் நேரடி இசை நிகழ்ச்சியும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

‘என்னோடு வா வீடு வரைக்கும்’ பாடலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த இசை விழா, அதே பாடலுடன் உணர்வுப்பூர்வமாக நிறைவடைந்தது.

ப்ரீத்தி ஸ்ரீவிஜயனின் Oruoorileoru Film House நிறுவனம் உருவாக்கிய இந்த இசைக் கொண்டாட்டம், விரைவில் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் சர்வதேச அரங்குகளிலும் நடைபெறவுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button