Spotlightசினிமா

விக்ரம் என்ற நடிகன் …

 

தமிழ் சினிமாவில் அஜித்தை விட பல மடங்கு சினிமாவில் கஷ்டப்பட்டவர் விக்ரம் தான், ஒரு படத்தின் 16 வருடம் தவம் இருந்தவர்.

எப்படியாவது இந்த சினிமாவில் வெற்றிக் கனியை அடைந்து விட வேண்டும் என்று பல வருடங்களாக தவம் இருந்து சேதுவாக உருமாறி அவதாரம் எடுத்தார்.

ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில் விக்ரம் அடையாத கஷ்டங்களே இல்லை, அவருக்கு ஒரு மேஜர் விபத்து ஏற்பட, இனி விக்ரம் எழுந்து கூட நடக்க முடியாது என்று கூறிவிட்டார்கள்.

கடைசியாக சீரியலில் நடிக்கும் நிலைமைக்கு கூட தள்ளப்பட்டார், அந்த நேரத்தில் தான் சேது தொடங்கியது, சேது படத்தில் இருந்த சோகத்தை விட படப்பிடிப்பில் நடந்த சோகங்கள் தான் அதிகம்.

பல முறை படப்பிடிப்பு நின்றது, படம் முடிந்தாலும் வெளிவருவதில் சிக்கல், என பல இன்னல்களிலும் பாலா-விக்ரம் இருவரும் உறுதியாக இருந்ததால் சேது வெளிவந்து விக்ரம் என்ற நடிகனை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது.

படத்திற்கு படம் வித்தியாசம், புது புது முயற்சி என கலக்கி வரும் விக்ரம் தன் 52வது வயதில் காலடி எடுத்து வைக்கின்றார். அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

Facebook Comments

Related Articles

Back to top button