Spotlightசினிமா

ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகும் ஹேப்பி எண்டிங்

‘குட் நைட்’, ‘லவ்வர்’ என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகரான ஆர். ஜே. பாலாஜி நடிப்பில், கலக்கலான ரொமாண்டிக் காமெடியாக உருவாகும், ‘ஹேப்பி எண்டிங்’ படத்தின் அசத்தலான டைட்டில் டீசர், தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் அம்மாமுத்து சூர்யா, இன்றைய நவ நாகரீக உலக இளைஞர்களின் வாழ்வியலைச் சொல்லும் வகையில், மிக புதுமையான திரைக்கதையில் இப்படத்தினை உருவாக்கி வருகிறார். நடிகர் ஆர். ஜே. பாலாஜி இதுவரை ஏற்றிராத புதுமையான வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார்.

ஆண் பெண் உறவுகளை, இதுவரை தமிழ் சினிமா காட்டியிருக்கும் மரபிலிருந்து மாறுபட்டு, இன்றைய உலகின் உறவு சிக்கலை படம்பிடித்துக் காட்டுகிறது இந்த டீசர். மிகப் புதுமையான டைட்டில் டீசர், இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பெண்களின் பலவிதமான எதிர்பார்ப்புகளில் சிக்கிக்கொண்டு அடி வாங்கும் இளைஞனை, ஒரு புதுமையான ஐடியாவில், அசத்தலாக காட்சிப்படுத்தியிருக்கும், டீசரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை இந்த டீசரை மேலும் அழகுபடுத்துகிறது.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறார்கள்.

தொழில் நுட்ப குழு விபரம்

இயக்கம் – அம்மாமுத்து சூர்யா
இசை – ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு – தினேஷ் புருசோத்தமன்
எடிட்டிங் – பரத் விக்ரமன்
புரடக்சன் டிசைனர் – ராஜ் கமல்
ஸ்டண்ட் – தினேஷ் காசி
உடை வடிவமைப்பு – நவா ராஜ்குமார்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

Facebook Comments

Related Articles

Back to top button