Spotlightசினிமா

ப்ரைம் வீடியோவில் பத்து மில்லியன்; சாதனை படைக்கும் “ஹாட் ஸ்பாட்”!

இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கலையரசன், சாண்டி, ஜனனி ஐயர், அபிராமி, ஆதித்யா பாஸ்கர், கெளரி கிஷன் உள்ளிட்ட நடிகர்களை வைத்து உருவாகி திரையில் வெளிவந்த திரைப்படம் தான் “ஹாட் ஸ்பாட்”.

படம் வெளிவருவதற்கு முன் மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்த நிலையில், படம் வெளியான பிறகு பலராலும் பெரிதும் பாராட்டப்பட்டது.

மேலும், விமர்சன ரீதியாகவும் அனைவராலும் பெரிதாக கொண்டாடப்பட்டது. தவறான ப்ரொமோஷன் யுக்தியால் இப்படம் பெரிதாக திரையரங்குகளில் கொண்டாடப்படாமல் போனது.

இந்நிலையில், படமானது திரையங்குகளை கடந்து ஓடிடி’யில் சில தினங்களுக்கு முன் வெளியானது.

ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியான இப்படம், வெளியான சில தினங்களிலே சுமார் பத்து மில்லியன் ஸ்டிரீமிங் நிமிடங்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல், இணையவாசிகளால் பெரிதும் கொண்டாடப்பட்டும் வருகிறது இப்படம்.

Facebook Comments

Related Articles

Back to top button