Spotlightசினிமா

4 வருடங்கள் கடந்த ‘மெட்ராஸ்’… காலம் போற்றும் காவியம்!

பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி, கேத்ரின் தெரசா, கலையரசன் நடிப்பில் வெளிவந்தது மெட்ராஸ். வட சென்னையில் சுவர் விளம்பரத்தை மையப்படுத்தி சமூக அரசியலை வெளிப்படுத்தி வெளிவந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

அட்டக்கத்தி படத்திற்கு பிறகு, தனது இரண்டாவது படைப்பாக “மெட்ராஸ்” படத்தை கொடுத்திருந்தார் இயக்குனர் பா ரஞ்சித். இப்படத்திற்கு பிறகு டாப் 10 இயக்குனர்களின் வரிசையில் வலம் வந்தார் இயக்குனர் பா ரஞ்சித்.

சந்தோஷ் நாராயணனின் இசையில் இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று அனைவரும் கொண்டாடப்பட்டது.

மீண்டும் இப்படி ஒரு படம்(காவியம்) வராதா என ஏங்கும் அளவிற்கு படத்தின் மீது ஒரு காதலை பதிவு செய்தார் இயக்குனர்.

படம் வெளியாகி இன்றோடு 4 வருடங்கள் கடந்த நிலையில், இதனை சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் சமூக விமர்சகர்களும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button