
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ளது ‘கோலமாவு கோகிலா’. படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது.
அனிருத் குரலில் வெளிவந்த ‘எனக்கு கல்யாண வயசு’ பாடல் யூடியூப்பில் சுமார் 41 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு புது சாதனை நிகழ்த்தியுள்ளது.
மேலும், இப்பாடலில் யோகிபாபுவின் பெர்பார்மன்ஸ் அனைவராலும் மிகவும் ரசிக்கப்பட்டது.
வரும் 17 ஆம் தேதி படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இளைஞர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரு பட வரிசையில் ‘கோலமாவு கோகிலா’ தான் முதலிடத்தில் உள்ளதாம்.
Facebook Comments