Spotlightசினிமா

அசர வைக்கும் ப்ரொமோஷன்… அதீத எதிர்பார்ப்பில் விஷ்ணு விஷாலின் “FIR”!

விஷ்ணு விஷால் நடிப்பில் அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ளது “FIR”.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆரம்பித்து ட்ரெய்லர் வரை அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இதனால் இப்படத்தின் மீது சற்று எதிர்பார்ப்பு எட்டத் துவங்கியது.

விஷ்ணு விஷால் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் அவதாரம் எடுத்து வித்தியாசமான தோற்றத்தில் தோன்றி அசர வைக்க இருக்கிறார்.

கொரோனா மூன்றாவது அலை காரணமாக பல பெரிய பெரிய படங்கள் தங்கள் தேதிகளை மாற்றியமைத்தது. இந்த காலத்தை சரியாக பயன்படுத்தி தனது “எப்.ஐ.ஆர்” படத்தை களமிறக்கவிருக்கிறார் விஷ்ணு விஷால்.

ரிலீஸுக்கு மிகக் குறைந்த நாட்களே இருக்கின்ற நிலையில், ப்ரொமோஷன் பணிகளை படு வேகமாக முடுக்கிவிட்டு கடைக்கோடி ரசிகனையும் எட்டும் வரை செய்திருக்கிறார் விஷ்ணு விஷால். இப்படத்தின் தயாரிப்பாளரும் இவரே என்பதால் கடும் உழைப்பையும் இதில் செலவிட்டுள்ளார்.

படத்தின் முதல் வெற்றியே, இப்படத்தினை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் “ரெட் ஜெயண்ட்” நிறுவனம்வெளியிடவிருப்பது தான்.

பல திரையரங்குகள் இப்படத்தின் வருகைக்காக காத்திருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

Facebook Comments

Related Articles

Back to top button