
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “விக்ரம்”.
இப்படம் வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைவரிடத்திலும் நல்லதொரு வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் தோன்றியிருப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.
விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் சூர்யா தான் ஹீரோவாக நடிப்பதாகவும் அதற்காகவே “விக்ரம்” படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சூர்யா தோன்றியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இத்தகவலை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
Facebook Comments