
அகில் பால் & அனஸ் கான் இருவரின் இயக்கத்தில் டோவினோ தாமஸ், த்ரிஷா, வினய் ராய் நடிப்பில் உருவாகி கடந்த வியாழன் அன்று வெளியான திரைப்படம் தான் IDENTITY.
இப்படம், வெளியான நாள் முதல் சினிமா ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் அகில் ஜார்ஜ். மேலும், இசையமைத்திருக்கிறார் ஜேக்ஸ் பிஜோய்.
ராகம் மூவீஸ் பேனரின் கீழ் ராஜு மல்லையாத் மற்றும் கான்ஃபிடன்ட் குரூப் சி.ஜே.ராய் இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
கதைக்குள் பயணிக்கலாம்…
எந்த வேலை செய்தாலும், அதில் திருப்தி அடையாத நபராக இருப்பவர் ஆரனாக வரும் டோவினோ தாமஸ். இவருக்கு இரண்டு சகோதரிகள். தனது உலகமே இருவர் தான் என்று வாழ்ந்து வருகிறார் டோவினோ.
இந்நிலையில், இளம்பெண்களை தவறாக வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் நபர் ஒருவரை கண்டுபிடித்து அவரை தீ வைத்து கொன்றுவிடுகிறார் டோவினோ.
இந்த கொலையை நடிகை த்ரிஷா பார்த்துவிடுகிறார். சில நேரத்திலேயே த்ரிஷாவிற்கு விபத்து ஏற்பட, விபத்தில் அவருக்கு Face blind என்ற வித்தியாசமான குறை ஏற்படுகிறது. Face blind என்றால், எதிரில் இருப்பவர் அது தன் அப்பாவாக இருந்தாலும் முகம் பார்த்து கண்டுபிடிக்க முடியாதது தான் இந்த Face blind.
கொன்றவர் டோவினோ தான் என்று தெரிந்தும் அவரை, த்ரிஷாவால் காண்பிக்க முடியவில்லை… காரணம் அவருக்கு இருக்கும் அந்த் பேஸ் ப்ளைண்ட் தான்..
இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார் வினய். அதன்பிறகு பல திடுக்கிடும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. வினய்க்கு ஒரு பேக் க்ரெளண்டும், டோவினோவிற்கு ஒரு பேக் க்ரெளண்டும் இருப்பதாக கதை நகர, இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகனான டோவினோ தாமஸ் இப்படத்திற்கு மிகவும் சரியான தேர்வு தான். தனது கதாபாத்திரத்தை மிகவும் மிடுக்காகவும் நேர்த்தியாகவும் செய்து முடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக கார் சேசிங் காட்சி மற்றும் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி இரண்டிலும் தனக்கே உரித்தான உடல் மொழியில் நடித்து காட்சிக்கு உயிர் கொடுத்திருக்கிறார். க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் உழைப்பு நன்றாகவே தெரிகிறது.
வில்லனாக வினய், மிகவும் சரியான பொருத்தம் தான். தனது ஸ்டைலிஷான வில்லத்தனத்தை இப்படத்திலும் கொடுத்து அசரவைத்திருக்கிறார். க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியிலும் நன்றாகவே கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
ஆங்காங்கே சின்ன சின்ன இடத்தில் ஸ்கோர் செய்யக் கூடிய கதாபாத்திரத்தை மிகவும் கச்சிதமாக தனது கண்களால் கச்சிதமாக செய்து முடிக்கிறார் த்ரிஷா.
ஜேக்ஸ் பிஜோயின் இசையில் பின்னணி இசை மிரட்டலாக இருந்தது. ஆனால், ஒரு சில இடங்களில் பேசும் வசனங்களையும் ஓவர் டெக் செய்து பின்னணி இசை இருந்ததால், வசனங்களை சரியாக கேட்க முடியவில்லை. அதை சற்று கவனித்திருந்திருக்கலாம்.
அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவு கூர்ந்து கவனிக்க வைத்தது. அதிலும் குறிப்பாக க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி, கார் சேசிங் சண்டைக் காட்சி இரண்டிலுமே ஒளிப்பதிவு மிகப்பெரும் பங்கு வகித்தது. இந்த ஆண்டின் சிறந்த ஒளிப்பதிவாளராக அகில் ஜார்ஜ் இருப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம்.
நலல்தொரு கதையை எடுத்து அதில் நேர்த்தியாக திரைக்கதை அமைத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள் இயக்குனர்கள். ஏர் மார்சல் பணியின் மகத்துவத்தைக் கூறியிருக்கிறார்கள். முதல் பாதியில் சற்று நீளத்தை குறைத்து இன்னும் வேகப்படுத்தியிருந்தால் ஐடண்டிட்டி இன்னும் கூடுதல் கவனம் பெற்றிருந்திருக்கும்.
IDENTITY – Box Office Hit





