Spotlightசினிமா

இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்க கேரள அரசு முடிவு

இந்திய சினிமாவே வியக்குமளவுக்கு பல மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார் இசைஞானி இளையராஜா.

இவரது முதல் படம் அன்னக்கிளி…. 500வது படம் அஞ்சலி…. 1000வது படம் தாரை தப்பட்டை.

இத்தனை படங்களை கடந்து விட்டாலும் தற்போதும் அதே உத்வேகத்துடன் இசையமைத்து வருகிறார்.

தற்போது சைக்கோ, தமிழரசன், துப்பறிவாளன் 2, கிளாப், மாமனிதன் உள்ளிட்ட படங்கள் இவரது இசையில் உருவாகி வருகிறது.

இந்த நிலையில், இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கவுள்ளதாக கேரள அரசு முடிவெடுத்துள்ளதாம்.

இந்த விருதை வருகிற 2020 ஜனவரி மாதம் 15ம் தேதி சபரிமலை சன்னிதானத்தில் வழங்கவுள்ளனர்.

ilayaraja selected for the harivarasanam award by Kerala Govt

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close