
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி படத்தை தயாரித்து உலகளவில் மிகப்பிரம்மாண்டமாக வெளியிட்டார் கலைப்புலி எஸ் தானு.
அந்த படத்திற்கு இந்தியா வியக்கும் அளவுக்கு விளம்பரங்களை செய்திருந்தார்.
பொதுவாக ஒரு படத்தை விளம்பரம் செய்தால் கார், ஆட்டோ, பஸ், ரயில்களில் போஸ்டர்கள் ஒட்டுவார்கள். ஆனால் கபாலி படத்திற்கு விமானத்தில் கபாலி ஸ்டிக்கர்களை ஒட்டி அசத்தினார்.
அப்போதே இதை பெருமையாக ரஜினி ரசிகர்கள் கொண்டாடினார்கள். தற்போது அவர்களுக்கு அடுத்த தர்பார் கொண்டாட்டமும் இணைந்துள்ளது.
தர்பார் படத்தையும் லைகா இதே பாணியில் விமானத்தில் விளம்பரம் செய்து வருகிறது.
ரஜினியின் தர்பார் பட ஸ்டிக்கர்களை விமானத்தில் ஒட்டி பறக்கவிட்டுள்ளனர்.
முருகதாஸ் இயக்கியுள்ள தர்பார் திரைப்படம் வருகிற ஜனவரி 9ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
Lyca takes Rajinis Darbar promotion at sky level by flight





