Spotlightஇந்தியாசினிமாதமிழ்நாடு

பொது இடத்தில் எச்சில் துப்பினால் கடும் நடவடிக்கை.. மத்திய அரசு விதித்த நிபந்தனை!

ப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகு ஒரு சில இடங்களுக்கும் நிறுவனங்களுக்கும் 144 தடை உத்தரவை சில நிபந்தனைகளோடு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது..

அதில்,

பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக் கூடாது. இறுதிச் சடங்குகளில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊரகப் பகுதிகளில் தொழில் நிறுவனங்கள், உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் இயங்க அனுமதி.

ரயில் மற்றும் விமான சேவைகளுக்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்படுகிறது. அதே நேரத்தில் மருந்துப் பொருட்கள், மருந்து உபகரணங்கள் கொண்டு செல்ல மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் வெளியே செல்லும்போது, முகக்கவசம் அணிவது கட்டாயம். வேலை செய்யும் இடங்களிலும் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதுமட்டுமல்லாமல் பொது இடங்களில் எச்சில் துப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ’ என்று கூறப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button