
விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ளது ‘கொலைகாரன்’. இப்படத்தினை ஆண்ட்ரூ லூயிஸ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். சைமன் கே கிங் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு செய்துள்ளார் முகேஷ்.
இப்படத்தின் முதல் முன்னோட்ட வீடியோ வெளியானதில் இருந்து அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ளது.
படத்தின் ஒளிப்பதிவில் ஆரம்பித்து, பின்னனி இசை என அனைத்தும் மிரட்டலாக வந்துள்ளதால், அனைத்து தரப்பு மக்களிடையேயும் ஒரு விதமான நல்ல எதிர்பார்ப்பு பரவலாக நிலவி வருகிறது.
வெள்ளி முதல் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்படும் என, இப்படத்தினை வெளியிடும் போப்டா மீடியா வொர்க்ஸ் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.
Facebook Comments





