பெங்களூரு: இன்றைய லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் ஹர்திக் பாண்டயா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பெங்களூரு அணியில் மனன் வோரா அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.
தொடர்ந்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை மட்டுமே எடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
Facebook Comments