
நடிகர்கள்: கெளதம் கார்த்திக், சாரா, வைபவி, யாஷிகா, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், மதுமிதா
இயக்குனர்: சந்தோஷ் பி ஜெயக்குமார்
இசை: பாலமுரளி
ஒளிப்பதிவு: பாலு
கதைப்படி நாயகன் கெளதம் கார்த்திக் ஒரு ப்ளே பாய் ஆனாலும் ஒரு வெர்ஜின் பாய். இதனால் கெளதமிற்கு அவர்கள் குடும்பத்தினர் எங்கு தேடியும் பெண் கிடைத்தபாடில்லை. கடைசியாக நாயகி வைபவி கெளதமை திருமணம் செய்ய சம்மதிக்கிறார்.
ஆனால், ஒருவாரம் வெளியூர் சென்று உன்னை பற்றி நன்றாக தெரிந்தால் மட்டுமே திருமணம் செய்ய சம்மதிப்பதாக கெளதம் கார்த்திக்கிற்கு வைபவி கூற, கெளதம், வைபவி, கெளதமின் நண்பன் சாரா, சாராவின் காதலி யாஷிகா நால்வரும் பேங்காக் செல்கின்றனர்.
அங்கு ஒரு பங்களாவில் தங்குகிறார்கள். அந்த பங்களாவில் ஒரு பெண் பேய் இவர்கள் நால்வரையும் ஆட்டி படைக்கிறது. தான் ஒரு வெர்ஜின் பையனோடு செக்ஸ் வைத்தால் மட்டுமே இங்கு இருந்து செல்வதாக அந்த பேய் கூற, அந்த பேயை விரட்ட வருவதாக கூறி அந்த வீட்டிற்குள் திருட வரும் மொட்டை ராஜேந்திரன் மற்றும் பால சரவணனும் அந்த பேயின் பிடிக்குள் மாட்டிக் கொள்கிறார்கள்.
இவர்கள் நால்வரில் ஒருவருடன் செக்ஸ் வைத்தால் மட்டுமே உங்கள் அனைவரையும் உயிரோடு விடுவதாக கூற, கடைசியில் அந்த பேயின் ஆசை நிறைவேறியதா..?? அந்த வீட்டிற்குள் இருந்த அனைவரும் தப்பித்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தின் கதை என்று பார்த்தால் எதுவுமே சொல்வதற்கில்லை. கருத்தோ, மெசெஜோ, என்று எதுவாவது கூறுவார்கள் என்று திரையரங்கிற்குள் செல்ல வேண்டாம். செக்ஸ் அடல்ட் காமெடி விரும்பிகளுக்கு இப்படம் ஒரு வரப்பிரசாதம். ஹரஹர மஹாதேவகி படத்தை பார்த்தவர்கள், இப்படத்தை தவறாமல் பலமுறை பார்ப்பார்கள். அப்படத்தை விட இப்படம் பத்து மடங்கு பவர் ஃபுல் தான்….
படத்தின் டைட்டில் தெரிந்தும் திரையரங்கிற்குள் சென்று படத்தை முழுவதும் பார்த்துவிட்டு வெளியே வந்து படம் குப்பை என கூறுபவர்கள்தான், யாருக்கும் தெரியாமல் மீண்டும் இப்படத்தை பார்ப்பவர்களாக இருப்பார்கள்.
இருட்டு அறையில் முரட்டு குத்து – இருட்டு அறையில் கல்லா கட்டும்…