Spotlightவிமர்சனங்கள்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சனம் 3/5

பொன்வண்ணன்னோடு ஏற்பட்ட மனக்கசப்பில் அவரை விட்டு பிரிகிறார் அவரது மனைவி. இவர்களுக்கு ஒரே மகன் கெளதம்(ஹரீஷ் கல்யாண்). தந்தை பொன்வண்ணனின் அரவணைப்பில் வளர்கிறார். தாய் வருவார் வருவார் என ஏங்கி ஏங்கி அவர் மீது வெறுப்படைகிறார் கெளதம். இதனால் ஒரு முரட்டு ஆளாகவே வளர்கிறார். எதற்கெடுத்தாலும் கோபம், அடி, என நண்பர்களோடு ஊர்சுற்றி வருகிறார்.

பெரிய இடத்து பெண்ணாக வருகிறார் தாரா(ஷில்பா மஞ்சுநாத்). மோதலில் ஆரம்பிக்கும் இருவரது சந்திப்பு பின் காதலில் இணைகிறது. கெளதமின் முரட்டுத்தனத்தால் அவ்வப்போது இருவருக்கும் சண்டை வருகிறது. வாழ்க்கை என்ற கட்டத்திற்குள் போகும் போது தாரா சில முக்கியமான முடிவுகள் எடுக்க நினைக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது.. இவர்களது காதல் ஜெயித்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக ஹரீஷ் கல்யாண் பொருத்தமான தேர்வு தான். ஆக்‌ஷன் களத்திற்கு புதியவர் என்றாலும், ஏற்றுக் கொள்ள முடிகிறது. கோபம், காதல், என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். அதிலும் பாட்டிலை வைத்து அடிக்கும் காட்சியில் ஒரு மாஸை கொடுத்திருக்கிறார். படத்திற்கு படம் இவரது நடிப்பு மெருகேறிக் கொண்டே தான் செல்கிறது. ஹரீஷ் கல்யாண் – ஷில்பா மஞ்சுநாத் இருவர்களுடனான காதல் காட்சிகளில் கெமிஸ்ட்ரி நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.

ஷில்பா மஞ்சுநாத்; விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த காளி இவரது முதல் படமாக இருந்தாலும், ”இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” தான் ஷில்பாவிற்கு அடையாளமாக இருக்கிறது. காட்சிக்கு காட்சி கிர்ர்ர்ர்ர்ர் வரவைக்கிறார்…. அழகிலும் நடிப்பிலும் செம.. பொருத்தமான தேர்வு தான்.

மா கா பா ஆனந்த், பால சரவணின் காமெடிகள் அவ்வப்போது மட்டுமே எடுபட்டிருக்கிறது. முதல் பாதியில் ஏற்பட்ட அந்த சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் கொடுக்க தவறவிட்டுவிட்டார் இயக்குனர். இரண்டாம் பாதியில் மிகப்பெரிய கத்திரியை போட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இயக்குனராக காதலின் ஆழத்தை நன்கு புரிந்தே படத்தினை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளலாம்.

கவின் ராஜ்ஜின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். காட்சிக்கு காட்சி அழகாக கொடுத்திருக்கிறார். இருவரது கண்களில் இருக்கும் காதலை அழகாக வெளிக்காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கவின் ராஜ்.

சாம் சி எஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.. பின்னனி இசை மிரட்டல்..

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – காதல் பழசுதான் காட்சிகள் புதுசு…

Facebook Comments

Related Articles

Back to top button