Spotlightசினிமா

அதிகரிக்கும் திரையரங்குகள்.. மகிழ்ச்சியில் “அடங்க மறு” படக்குழுவினர்!

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த வாரம் வெளியானது ‘அடங்க மறு’. மக்களிடையே அமோக வரவேற்பை பெற்ற இப்படம் திரையரங்குகளில் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனால் திரையரங்குகளுல் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் ஜெயம் ரவி பேசும் போது,

“நிச்சயமாக, எனக்கு புதிய பரிமாணத்தை வழங்கிய ‘டிக் டிக் டிக்’ மற்றும் ‘அடங்க மறு’ ஆகிய படங்களில் ஒரு பகுதியாக இருந்ததை மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். முதலில் என்னை நம்பிய இயக்குனர்கள் சக்தி சௌந்தர்ராஜன் (டிக் டிக் டிக்) மற்றும் கார்த்திக் தங்கவேல் (அடங்க மறு) ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எந்த ஒரு சூப்பர்ஸ்டாரும் இந்த படங்களை இழக்க விரும்ப மாட்டார்கள் என்ற அளவில் இந்த படங்களின் திரைக்கதை இருந்தது. ஆனால் இந்த திரைப்படங்களில் முதலிலேயே கதாநாயகனாக என்னை கற்பனை செய்து பார்த்தது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது.

நிச்சயமாக, நேமிசந்த் ஜபக் சார் மற்றும் சுஜாதா விஜயகுமார் அத்தை போன்ற தயாரிப்பாளர்கள் இல்லையென்றால், இந்த படங்கள் உருவாகியிருக்காது. வெறுமனே வெற்றி கொடுக்கும் உற்சாகத்தை விட, என் அடுத்த திரைப்படங்களை கவனமாக தேர்வு செய்வதில் உள்ள கூடுதல் பொறுப்பை நான் உணர்கிறேன்.

இந்த திரைப்படங்கள் மிகப்பெரிய சவால்களை கொண்டிருந்தன, அதை தாண்டி நல்ல படமாக கொண்டு வர தொழில்நுட்ப கலைஞர்கள் கடுமையாக உழைத்தனர். மேலும் இந்த படங்களில் மிகச்சிறந்த நடிகர்கள் கிடைத்தது என் பாக்கியம், அவர்கள் தான் என்னை இன்னும் சிறப்பாக நடிக்க உந்தினார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் என் திரைப்படங்களை கொண்டாடினார்கள். அது தான் என்னை பல்வேறு வித்தியாசமான கதைகள் மற்றும் வேடங்களில் தொடர்ந்து நடிக்க ஊக்குவிக்கிறது.” என்றார்.

Facebook Comments

Related Articles

Back to top button