Spotlightசினிமாதமிழ்நாடு

ஜூன் 1 முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு… அட்டவணை இதோ!

ஜூன் 1 ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும். பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள தேர்வு ஜூன் 2-ம் தேதி நடைபெறும். 12-ம் வகுப்பை சேர்ந்த 36,842 மாணவர்களுக்கு ஜூன் 4-ந்தேதி தேர்வு நடைபெறும்.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மே 27-ந்தேதி தொடங்கும். பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். 10 கல்லூரிகளில் நீட் பயிற்சி வகுப்புகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ” என்று கூறினார்.

தேர்வு அட்டவணை விவரம்:-

ஜூன் 1-ந்தேதி : மொழிப்பாடம்
ஜூன் 3-ந்தேதி : ஆங்கிலம்
ஜூன் 5-ந்தேதி : கணிதம்
ஜூன் 8-ந்தேதி : அறிவியல்
ஜூன் 10-ந்தேதி : சமூக அறிவியல்
ஜூன் 6-ந்தேதி : விருப்ப மொழிப்படம்
ஜூன் 12-ந்தேதி : தொழிற்பாடம்

Facebook Comments

Related Articles

Back to top button