Spotlightதமிழ்நாடு

சிறு துணி கடைகளுக்கு அனுமதி அளித்த ஆட்சியர்… நன்றி தெரிவித்த திருப்பூர் ஜவுளி வியாபாரிகள் சங்கம்!!

திருப்பூர் ஜவுளி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் இன்று காலை திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து சிறு துணி கடைகளை நடத்த அனுமதி கேட்டு கடிதம் அளித்து, உடனடியாக ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

நம்முடைய கோரிக்கையை கனிவாக பரிசீலித்த திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு க.விஜய கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து வந்துள்ள விதிமுறைகள் கண்டிப்பாக அனைத்து கடையிலும் கடைபிடிக்க வேண்டும்.

வாடிக்கையாளர் கண்டிப்பாக 80% ஆல்கஹால் உள்ள தரமான சனிடைசர் கொண்டு கைகழுவிய பின் தான் கடைக்குள் அனுமதிக்க வேண்டும்.

கடைக்குள் வரும் வாடிக்கையாளரின் வெப்பம் தர்மா மீட்டர் கொண்டு கணக்கெடுத்து காய்ச்சல் இல்லை என்றால் மட்டும் கடைக்குள் அனுமதிக்க வேண்டும்.

வாடிக்கையாளர் முக கவசம் அணிந்து வரவில்லையென்றால் கடைக்காரர்கள் கண்டிப்பாக மாஸ்க் தரவேண்டும்.

கடைக்குள் வரும்முன் வாடிக்கையாளரின் பெயர், மற்றும் தொலைபேசி எண் வாங்கி வைக்க வேண்டும்.

ஏசி உபயோகப்படுத்தக் கூடாது.

நல்ல காற்றோட்டத்துடன் கடை இருக்க வேண்டும்.

வாடிக்கையாளர்களை துணியை கையில் தொடுவதற்கு அனுமதிக்க வேண்டாம்.

ட்ரையல் பார்த்து வேண்டாமென்ற துணிகளை 24 மணி நேரம் தனியாக வைக்கவும்.

கண்டிப்பாக கதவு, கைப்பிடி, கம்ப்யூட்டர், கீபோர்டு, ஏடிஎம் ஸ்வைப்பிங் மிஷின் அனைத்தையும் அடிக்கடி சனிடைசர் கொண்டு துடைத்து வைக்க வேண்டும்.

ஒரு வாடிக்கையாளருக்கும் இன்னொரு வாடிக்கையாளருக்கும் ஒரு மீட்டர் இடைவெளி கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

இருமல் தும்மல் அடிக்கடி வந்தால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பணியாளர்கள் அடிக்கடி சோப்பு போட்டு கையை கழுவிக் கொண்டே இருக்க வேண்டும், அதிகமாக சனிடைசர் உபயோகப்படுத்தினால் சிலருக்கு அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது.

முக கவசம் மூக்கை மற்றும் வாயை இரண்டையும் மறைத்தபடி இருக்க வேண்டும்.

N95 முக கவசம் தான் மிகவும் அதிக பாதுகாப்பு தரக்கூடியது முடிந்தவரை பணியாளர்களுக்கு அந்த வகை கவசம் தரவும், மேலும் அனைத்து நேரத்திலும் கடையில் உள்ள அனைவரும் மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும்.

கழிவறைகளை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

கூட்டமாக வரும் வாடிக்கையாளரிடம் ஒருவரை மட்டும் உள்ளே வரும்படி சொல்லவும்.

முடிந்தவரை காலணிகளை கடைக்கு வெளியே விட்டு வரச் சொல்லவும்.

ஒரு நாளைக்கு மூன்று முறை லைசால் அல்லது டெட்டால் உபயோகப்படுத்தி தரையை சுத்தம் செய்தாக வேண்டும்.

சில வாடிக்கையாளர்களுக்கு எந்தவித பயமும் இருக்காது அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி விதிமுறைகளைப் பின்பற்ற சொல்லவும்.

காலை 10 மணி முதல் 7 மணி வரை வியாபாரம் செய்ய அனுமதித்து உள்ளார்கள், அதற்குமேல் ஒரு நிமிடம் கூட கடை திறந்து இருக்கக்கூடாது.

வாடிக்கையாளர்களை போல் அதிகாரிகள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வலர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் விதிமுறைகளை பின்பற்றுகிறோமா என்று ஆய்வுக்கு வருவார்கள், ஆகையால் விழிப்புணர்வுடன் வியாபாரம் செய்யுங்கள்.

இந்தப் பேரிடர் காலத்தில் அனைவரும் ஒத்துழைத்தால் மட்டுமே மீண்டும் நாம் பழைய நிலைக்கு வர முடியும்.

அனைவரின் பாதுகாப்பு முக்கியம், கவனமுடன் வியாபாரம் செய்வோம்.

வாழ்த்துக்களுடன்
திருப்பூர் ஜவுளி வியாபாரிகள் சங்கம்.

Facebook Comments

Related Articles

Back to top button