
அருள்நிதி, ஷ்ரதா ஸ்ரீநாத் நடிப்பில் வெளிவந்திருக்கிறது K 13.
சினிமாவில் இயக்குனராக வாய்ப்பு தேடி அலையும் இளைஞர்களில் அருள்நிதியும் ஒருவர்.. கதை எழுதும் நாவலாசிரியர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர்கள் இருவரும் ஒருநாள் இரவு பார் ஒன்றில் அறிமுகமாகிறார்கள். மறுநாள் காலை கண் விழித்து பார்த்தால் அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் வீட்டில் தனது கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடக்கிறார்.
எதிரில் பிணமாக கிடக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இதற்கிடையே ஷ்ரத்தாவுக்கு என்ன ஆயிற்று என விசாரிக்க போலீஸ் அவர் வீடு தேடி வருகிறது. பூட்டிய வீட்டிற்குள் இருக்கும் அருள்நிதி எதனால் இந்த நிலைக்கு ஆளானார்..? அதை கண்டுபிடித்தாரா..? அங்கிருக்கும் போலீசிடம் இருந்து அவர் தப்பித்தாரா..? இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
ஒரு அபார்ட்மெண்டில் இருக்கும் K 13 இருக்கிற என்கிற பிளாட்டில் நடக்கும் கதை என்பதால் அதையே தலைப்பாக வைத்துள்ளனர். அருள்நிதிக்கு உதவி இயக்குனர் வேடம் என்பது ஏக பொருத்தம்.. அதைவிட அவர் குடித்துவிட்டு மிக நிதானமாக பேசுவது மிக அழகாக இருக்கிறது. அலட்டிக்கொள்ளாத நடிப்பு, அவரது கதாபாத்திரத்தை அழகாக மாற்றி இருக்கிறது.
படம் முழுதும் பாதி நேரம் சடலமாகவும் மீதி நேரம் தனது வித்தியாசமான சிந்தனைகளால் நம்மை சற்றே குழப்பியும் சற்றே திகைக்கவும் வைக்கும் கதாபாத்திரம் தான் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு. .
ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் அரங்கை சிரிப்பலையில் அதிர வைக்கிறார் யோகிபாபு.
கிளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட் வைத்து கதையை முடித்திருக்கிறார் இயக்குனர் பரத் நீலகண்டன். ஆனால் அது சராசரி ரசிகர்கள் எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை ஒரே அறையில் நடப்பதாக இந்த முதல் பாதி சற்று மெதுவாக நகருவது போன்ற எண்ணம் ஏற்படுகிறது. அதை ஈடுகட்டும் விதமாக இரண்டாம் பாதி விறுவிறுப்பாக நகர்கிறது த்ரில்லர் பிரியர்களுக்கு இந்த படம் திருப்தியை தரும்.
K 13 – 3/5