
கே வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகியுள்ளது ‘காப்பான்’. இப்படம் வரும் 20 ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன், நடைபெற்ற படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சூர்யா, எனது படத்திற்கு பேனர்கள் வைப்பதற்கு பதிலாக மாணவர்களின் கல்விக்கு ஏதாவது உதவிக்கரம் நீட்டுங்கள் என்று கூறினார்.
அதுமட்டுமல்லாமல், நெல்லை டெபுடி கமிஷ்னர் அர்ஜுன் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் ’ புதிய திரைப்படம் வெளியாகும் போது பிளக்ஸ் பேனர், கட்அவுட் வைப்பதிற்கு பதிலாக மக்களுக்கும் ரசிகர்களுக்கும் தரமான “ஹெல்மட்” வழங்கினால்
அவர்களே உடனடியாக உண்மையான “காப்பான்” ஆக முடியும்.’ என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட சூர்யா ரசிகர்கள் மன்றம் சார்பில் படம் வெளியாகும் அன்று பேனர்கள் வைப்பதற்கு பதிலாக 200 பேருக்கு உயிர்காக்கும் கவசம் ஹெல்மெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நெல்லை மாவட்ட சூர்யா ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளை நேரில் அழைத்து தனது நன்றியை தெரிவித்துள்ளார் அர்ஜுன் சரவணன்.