
நாயகனாக அபி சரவணன், நாயகியாக மஹானா ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் ஜான் விஜய், பருத்திவீரன் சரவணன், மதுமிதா, சாம்ஸ் & காதல் சுகுமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் கெவின் கூறியதாவது …
இந்த படம் காதல், காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. நாயகனின் காதலை சேர்த்து வைத்த பால்ய மீனவ நண்பன் தீடிரென காணாமல் போகிறான். காணாமல் போன நண்பனை நாயகன் காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை.
இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமாரி, நாகர்கோவில், பூவாறு, முட்டம், பறம்பு மற்றும் கேரளாவின் அடர்ந்த காட்டுப்பகுதி ஆகிய இடங்களில் 30 நாட்களாக ஒரே கட்டமாக நடைபெற்று முடித்துள்ளோம்.
பிரசாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெயப்ரகாஷ் & ஜெய்தன் ஆகியோர் இசையமைக்கிறார்கள்.
ஜெய் படத்தொகுப்பு செய்ய,ராஜு முருகன் நடனம் அமைத்துள்ளார். மைக்கல் சண்டைக்காட்சிகளை அமைக்க, கிருஷ்ணமூர்த்தி டிஐ செய்கிறார்.




