
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “காத்துவாக்குல ரெண்டு காதல்”.
இப்படம் வரும் 28 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பாடல்களும் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து படத்திற்கான புக்கிங் தொடங்கப்பட்ட நிலையில், அசூர வேகத்தில் டிக்கெட்டுகள் தீர்ந்த வண்ணம் இருக்கின்றன. பிரபல சென்னை ரோஹினி திரையரங்கில் புக்கிங் தொடங்கப்பட்ட 24 மணி நேரத்தில் 2000 டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன.
தமிழகத்தில் அநேக திரையரங்குகளில் இப்படத்திற்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அஜித்தின் “ஏகே 62” படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் நிலையில் இவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” அஜித ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவனிக்குபடியான ஒரு படமாகவும் இது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





