Spotlightசினிமா

கொரோனா விழிப்புணர்வு… இது டான்ஸ் மாஸ்டர்ஸ் ஸ்பெஷல்!

காவல் துறையினருக்காக நடன இயக்குனர்கள் ராம்ஜி,ராபர்ட், ராஜு முருகன் மற்றும் விஷ்வா ஆகியோர் இணைந்து கொரோனா கானா பாடலை உருவாக்கியுள்ளனர்.

இந்த விழிப்புணர்வு பாடல் சென்னை அம்பத்தூர் மாவட்ட காவல் துறையினருக்காக வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா விழிப்புணர்வு கீதத்தின் வெற்றிக்குப் பிறகு BESTIE ONLINE GROCERIES ராஜேஷ் மோகன், JOD Events, மற்றும் ஸ்டேஜ் ஷோ இந்தியா ஒன்றிணைந்து மீண்டும் காவல்துறையினர்காக ஒரு அர்ப்பணிப்பு பாடல், சென்னை பெருநகர காவல் அம்பத்தூர் மாவட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை இது மிகவும் பிரபலமான கானா பாணியில் (தமிழ்நாட்டின் நாட்டுப்புறம்) ஒரு உணர்ச்சிபூர்வமான இணைப்பையும், காவல்துறையினரின் தன்னலமற்ற வேலைக்கான பிணைப்பையும் பிரதிபலிக்கும் பாடல்.

பாடலை எழுதி பாடியவர் : கானா ராஜாவேல்
இசை அமைப்பாளர்: டேவிட்.

இந்த பாடல் நிச்சயமாக அனைத்து வயதினரும் பார்த்து ரசித்து மகிழும் வகையில் அமைந்த ஒரு உன்னதமான படைப்பு..

இந்த பாடல் அம்பத்தூர் துணை ஆணையர் திரு.I.ஈஸ்வரன் அவர்களால் அவருடைய அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

Facebook Comments

Related Articles

Back to top button