Spotlightசினிமா

உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் ‘கூடு’

மிழில் புதிய முயற்சிகளுக்கு எப்போதும் மக்களின் ஆதரவு உண்டு. அந்த வகையில் ஸ்கைமூண் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் ஏ எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘கூடு’ என்ற பெயரில் புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது. இதன் டைட்டில் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஜோயல் விஜய் இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தை M கணேஷ் மற்றும் கண்ணன் P ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் நட்சத்திரங்களின் முகங்கள் எதுவுமின்றி ‘கூடு’ என்ற டைட்டில் மட்டும் வித்தியாசமாக இடம்பெற்றிருப்பதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button