Spotlightசினிமாவிமர்சனங்கள்

குலசாமி – விமர்சனம்

யக்குனர் சரவண சக்தி இயக்கத்தில் விமல், தன்யா ஹோப், வினோதினி, கீர்த்தனா, போஸ் வெங்கட், முத்து பாண்டி, உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகி இன்று திரை கண்ட திரைப்படம் தான் “குலசாமி”.

கதைப்படி,

தமிழ்நாட்டிலேயே பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் இடம் பிடித்த தனது தங்கையை மருத்துவராக்கத் துடிக்கிறார் விமல். அதற்காக, அக்கிராமத்தினரே செலவு செய்து விமல் தங்கையை படிக்க வைக்கிறார்கள்.

ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் சென்று தனது தங்கையை சேர்க்கிறார். கல்லூரி அருகிலேயே ஆட்டோ ஓட்டி வருகிறார் விமல்.

கல்லூரியில் படிக்க வந்து, கட்டணம் செலுத்த முடியாமல் இருக்கும் சில பெண்களுக்கு உதவுவது போல் உதவிக்கரம் நீட்டி விட்டு, பின் அவர்களை வைத்து பிராத்தல் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகிறது ஒரு கும்பல்.

அக்கும்பலிடம், பல கல்லூரி பெண்கள் சிக்கிக் கொள்கின்றனர். அந்த வரிசையில் விமலின் தங்கையை சிக்க வைக்க நினைக்கிறார்கள்.

இந்த சூழலில் விமலின் தங்கை கற்பழித்து கொல்லப்படுகிறார்.

தங்கையின் நினைவாகவே பித்து பிடித்தாற்போல, தங்கையை போல் இருக்கும் பலருக்கும் தன்னால் இயன்றதை செய்து வருகிறார் விமல்.

தங்கைக்கு ஏற்பட்டதை போல, இன்னும் சில கல்லூரி பெண்களுக்கு ஏற்படும் சூழலில் விமல் அங்கு சென்று கயவர்களை கண்டறிந்து பழிதீர்த்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

பல படங்களில் பார்த்த, பல படங்களின் கலவையாகத் தான் குலசாமி வந்திருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. வில்லன்களை இன்னும் சற்று வெயிட்டாகவே கொடுத்திருந்திருக்கலாம். இயக்குனரின் மகன் என்பதற்காக சற்று வெயிட் கொடுப்பதாக நினைத்து, வில்லனை டம்மியாக கொடுத்து படத்திற்கு வலு சேர்க்காமல் சென்று விட்டார் இயக்குனர்.

பெண்களை தொட்டாலோ அல்லது அவர்களின் அனுமதி இன்றி பாலியல் சீண்டலில் ஈடுபட்டாலோ அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய தண்டனை மிகக் கொடூரமானதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் சமரசம் இல்லாமல் தீர்ப்பை தீர்க்கமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சரவண சக்தி.

எவிடென்ஸ் எடுப்பதற்காக செல்லும் பெண், அங்கு ஒருவனுக்கு மயக்க ஊசி கொடுத்து எவிடன்ஸை எடுத்து தனது தோழிக்கு அனுப்பி வைக்கிறார். தன்னை சீரழித்தவனுக்கு எதற்காக மயக்க ஊசி போட வேண்டும், விஷ ஊசியே போட்டிருக்கலாமே.? லாஜிக் ஓட்டைகள் ஏராளமாகவே படத்தில் எட்டிப் பார்த்தன.?

படத்தின் திரைக்கதையில் இயக்குனராக சரவண சக்தி வென்றிருக்கிறார். பல படங்களில் பார்த்த ஒரு கதையையே கொடுத்து வழக்கமான படம் தானா என்று கடந்து செல்லும் படியாக நம்மையும் கடந்து செல்ல வைத்து விட்டார் இயக்குனர்.

விமலின் நடிப்பு பெரிதான ஒரு தாக்கத்தை கொடுக்கவில்லை. எப்போதும் சோக கீதம் வாசிக்கும்படியாகவே முகத்தை வைத்திருக்கிறார். ப்ளாஷ் பேக் காட்சிகளிலும் கூட.

தன்யா ஹோப் பெரிதாக ஜொலிக்கவில்லை. விஜய் சேதுபதியின் வசனங்களும் படத்திற்கு பெரிதாக கைகொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

ரவிஷங்கரின் ஒளிப்பதிவு படத்திற்கு சற்று ஆறுதல். க்ளைமாக்ஸ் காட்சி சண்டைக் காட்சியில் ஒளிப்பதிவு ரசிக்க வைத்தது.

மகாலிங்கம் இசையில், அறிமுக பாடல் ஆட்டம் போட வைத்தது. பின்னணி இசையில் மிரள வைத்திருக்கிறார்.

மொத்தத்தில் குலசாமி – போதும்டா சாமின்னு மட்டும் தான் சொல்ல வைக்கல…

Facebook Comments

Related Articles

Back to top button